Suganthini Ratnam / 2016 நவம்பர் 14 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
மட்டக்களப்பு மங்களராம விகாரையின் புத்தபிக்கு அம்பிட்டிய சுமணரத்தின தேரரின் செயற்;பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வாறான புத்தபிக்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபக்கேடு எனவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் கூறினார்.
மட்டக்களப்பு மங்களராம விகாரையின் புத்தபிக்கு அம்பிட்டிய சுமணரத்தின தேரரின் அடாவடித்தனத்தினைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ;விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில் 'மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் கெவிளியாமடு பகுதியில் அம்பாறை கண்டி பிரதான வீதியில் கடந்த 11ஃ11ஃ2016 வெள்ளிக்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் காரியாலய அலுவலர்கள் அங்கு சென்றபோது புத்தபிக்குவான அம்பிட்டிய சுமரணத்தின தேரர் பிரதேச செயலாளருக்கும் கிராமசேவை அதிகாரிக்கும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மிகவும் கீழ்தரமான வார்த்தைகளால் தமிழர்கள் புலிகள் எனவும் பறத் தமிழன் எனவும் தூசண வாரத்;தைகளால் திட்டித்தீர்த்தார்.
அந்த இடத்தில் கடமையில் நின்ற பொலிசார் வேடிக்கைபார்த்து நின்றனர். சம்பந்தப்பட்ட புத்தபிக்கு அத்துமீறி காணி அபகரிப்பு செய்வதை தடுக்கும் விதத்தில் நேரடியாக பார்வையிட சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளரும் காரியாலய உத்தியோகத்தர்களும் அங்கு சென்றபோது மிகவும் கீழ்தரமான முறையில் சம்பந்தப்பட்ட புத்தபிக்கு தமிழ் இனத்தை இம்சித்துள்ளார்.
இந்த புத்தபிக்கு ஏற்கனவே பலதடவை மட்டக்களப்பில் மாவட்ட அலுவலகம் பட்டிப்பளை பிரதேச செயலகம் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் என அத்துமீறி நுளைந்து குழப்பங்களில் ஈடுபட்ட பல வரலாறுகள் உள்ளன. ஒருத டவை கடந்த 2014ல் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் அத்துமீறி பிரவேசித்து பிரதேச செயலாளரை தாக்கமுயன்றார் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. இவ்வாறான செயல்பாடுகளை தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது
நல்லாட்சி அரசு இவரின் காட்டுமிராண்டி செயல்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் இந்த புத்தபிக்குவை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம ;செய்ய சம்பந்தப்பட்ட பௌத்தமத நிறுவனம் முன்வரவேண்டும்' என்றார்.
5 minute ago
21 minute ago
32 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
32 minute ago
3 hours ago