2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

777 பேருக்கு வாழ்வாதார உதவி

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட 261 குடும்பங்களைச் சேர்ந்த 777 பேருக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக எதிர்வரும் 28ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளன.

ஒருவருக்கு 2,400 ரூபாய் படி 06 வாரங்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்களே வழங்கப்படவுள்ளன.

இந்த மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை  வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (23) நடைபெற்றபோதே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கான உதவியை உலக உணவுத்திட்டம் வழங்கியுள்ளது.

மேலும், இந்த வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் புணானை கிழக்கில் 50 குடும்பங்கள், கோறளைப்பற்றின் கிண்ணையடி, கல்குடா, மீராவோடை ஆகிய கிராமங்களில்; 98 குடும்பங்கள், கோறளைப்பற்று தெற்கின் முறக்கொட்டான்சேனை, புணானை மேற்கு பிரிவுகளின் 71 குடும்பங்கள், கோறளைப்பற்று மேற்கில்; 28 குடும்பங்கள், ஏறாவூர்ப்பற்றில் மைலம்பாவெளி, கொம்மாதுறை மேற்கு பிரிவுகளின் 7 குடும்பங்கள், அத்துடன், மண்முனை மேற்கில் 3 குடும்பங்கள், போரதீவு பற்றில் 4 குடும்பங்களும் இந்த உதவிகளைப் பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .