2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

12 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

'நாடாளுமன்றத்துக்கு நான் தெரிவுசெய்யப்பட்டு ஒரு வருடம்; கடந்த நிலையில், மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்த 13 அரசியல் கைதிகளில் 12 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், ஒருவர் மட்டுமே சிறைச்சாலையில் உள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைக்கைதிகளுக்கு தொழில் வழிகாட்டல் பயிற்சி; வழங்கும் திட்டத்தின் கீழ், தும்புத்தடி தயாரிக்கும் பயிற்சி இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'சிறைக் கைதிகளின் விடுதலையின் பின்பு அவர்களின் வாழ்க்கை மற்றும் சிந்தனையில் மாற்றம் பெற்று வாழ்வாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும் எனும் நோக்கோடு தேசிய தொழில் தகைமைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

தேங்காய் மட்டையில் காணப்படும் தூசிக்கு மேற்குலக நாடுகளில் கிராக்கி அதிகமாக உள்ளது. பூச்செடிகள் வளர்ப்பதற்கான மண்ணிற்கு பதிலாக குறித்த தூசியைப் பயன்படுத்துகின்றனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பௌதீக வளங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றன. குறித்த பயிற்சி நிலையம் இல்லாமல் உள்ளது. இதை நிவர்த்திசெய்வதற்கு சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் பேசியும், எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யவுள்ளேன்.

சிறைச்சாலையின் தற்போதைய அதிகாரிகள் மற்றும் நலன்புரிச் சங்கத்தினர், கைதிகளின் குடும்பத்தினர், உறவினர்கள்,  கைதிகளின் மீது கொண்டிருக்கும் நலனை விட அதிகளவான மனிதாபிமானமிக்க பணிகளில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X