Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
கிழக்கு மாகாண மக்களுக்கு இழைக்கப்படும்; நீண்டகாலப் புறக்கணிப்புகள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும்வரை தானும் தனது மாகாணசபை நிர்வாகமும் ஓயாது என அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் வெற்றிக் கிண்ணத்துக்கான கிரிக்கெட்; மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு, ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) இரவு நடைபெற்றது. இதில்; கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இந்த மாவட்டத்தில் தசாப்தங்கள் கடந்து அரசியல்வாதிகள் அதிகாரங்களுடன் கோலோச்சியிருக்கின்றார்கள். ஆனாலும், அடிமட்ட மக்களின் பல பிரச்சினைகளை அவர்களால் தீர்த்துவைக்க முடியாமல் போனமை துரதிஷ்டமேயாகும்' என்றார்.
'நிதியைத் திரட்டிக்கொண்டுவந்து பொதுமக்களுக்கான அபிவிருத்திகளை எவ்வாறு செய்யவேண்டும் என்ற யுக்தி அரசியல் தலைமைகளுக்கு தெரிந்திருக்கவேண்டும். துடிப்புடன் மக்கள் சேவை செய்வதற்கான ஆளுமை இருக்க வேண்டும். பறைசாற்றித் திரியாமல் அனைத்து விடயங்களிலும் இராஜதந்திரம் தேவை. பறைசாற்றி மக்களை உசுப்பேற்றுவதற்காக மக்கள் எம்மை அரசியல் தலைமைகளாகத் தேர்ந்தெடுக்கவில்லை.
உண்மையான கனவான் அரசியலில் ஈடுபட்டால், பாதிக்கப்பட்ட மக்களின் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண சந்தர்ப்பம் இருக்கின்றது.
மத்திய அரசாங்கத்தில் கோடிக்கணக்கான நிதி இருக்கிறது. எவ்வாறேனும், ஆர்வம் இருந்தால் அபிவிருத்திக்கான நிதியைத் தேடிப்பெற்று மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் அவ்வளவு சிரமம் இருக்காது' என்றார்.
'மேலும், மாகாணத்தில் 5,000 பட்டதாரிகள் தொழிலின்றி இருக்கின்றார்கள். அடுத்த மாதத்துக்குள்; 350 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை மாகாணசபை வழங்கவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் கணிதபாட ஆசிரியர்கள் 434 பேருக்கு வெற்றிடங்கள் இருந்தும், அப்பாடத்துக்கு பட்டதாரிகளான 66 பேர் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.
அரசாங்கப் பணி இடங்களில் கிழக்கு மாகாணத்தில் 1,134 வெற்றிடங்கள் உள்ளன. 1,573 பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பித்திருக்கின்றார்கள். ஆனால், அவர்களில் 390 பேரே தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். இது பாரியதொரு பாராபட்சம். இது விடயமாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களிடம் பிரஸ்தாபித்துள்ளோம்.
கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் மாகாணத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டபோது, அவர்களை நாங்கள் பெரு முயற்சி எடுத்து மகாணத்துக்குள் உள்வாங்கினோம்.இம்முறை அவ்வாறு இடம்பெறாமல், கிழக்கு மாகாணத்திலிருந்து விண்ணப்பித்த கல்வியியல்; கல்லூரி மாணவர்கள் கிழக்கு மாகாணத்திலேயே தங்களின் பயிற்சியை முடிக்கவேண்டும் என்று நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.


1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago