2025 மே 09, வெள்ளிக்கிழமை

'பாலியல் தொந்தரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற பெண்; உத்தியோகஸ்தர்களை அலுவலக மேலதிகாரிகள் தொடுவது, அவர்களை வர்ணிப்பது தேவையற்ற படங்களை அவர்களுக்கு காண்பிப்பது போன்றவை பாலியல்; தொந்தரவாகும். இவ்வாறு நடக்க முற்படும்   குறித்த மேலதிகாரிக்கு எதிராக பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்பதற்கமைய சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

சமூக ஒழுக்கத்தை மேம்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் நகரசபைக் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற பெண் உத்தியோகஸ்தர்களுடன்  அலுவலக மேலதிகாரிகள் கௌரவத்துடனும் நன்மதிப்புடனும் நடக்கவேண்டும்.

ஒரு பெண் விரும்பினாலும், அந்தப் பெண்ணை தொடுவது பாலியல் தொல்லை கொடுப்பது போன்றவையும் பாலியல் தொந்தரவுக் குற்றமாகும். பாலியல் தொடர்பான சொற்களை பாவித்தல், அது தொடர்பாக உரையாடுதலும் பாலியல் தொந்தரவுக்குற்றமாகும்.

பாலியல் சொற்கள் மூலம் தொந்தரவு செய்பவர்களுக்கு எதிராகவும் சட்ட நடடிக்கை எடுக்க முடியும்.
மேலும், பாலியல் சொற்கள் மூலம் தொந்தரவு, பாலியல் தொந்தரவு, பாலியல் துஷ்;பிரயோகம் மற்றும் கற்பழிப்பு என வகைப்படுத்த முடியும். இதில் எதனைச் செய்தாலும் குற்றமேயாகும்.

சிறுவர்களின் அங்கங்களை கூட வர்ணிக்கவோ விமர்சிக்கவோ முடியாது. பாடசாலைகளில் கற்கும் பெண் பிள்ளைகளை வர்ணிப்பது, அவர்களின் கைகளை தொடுவது அல்லது அவர்களின் அங்கங்களை தொட்டுப்பார்ப்பது போன்றவைகளும் சிறுவர்கள் மீதான பாலியல் தொந்தரவாகும்.

யாரையும் யாரும் தண்டிக்க முடியாது. சித்திரவதை செய்ய முடியாது. குற்றம் செய்யும் ஒருவரை நீதிமன்றமே இவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என முடிவெடுக்கும். குற்றம் செய்யும் ஒருவரை பொலிஸார் சந்தேக நபராகவே கைதுசெய்கின்றனர். அவர் குற்றமுள்ளவரா அல்லது குற்றமற்றவரா என நீதிமன்றம் முடிவெடுத்து தண்டனை வழங்கும் அல்லது விடுவிக்கும். எந்தவொரு கணவனும் மனைவியை தண்டிப்பதற்கு மனைவிக்கு அடிப்பதற்கு சட்டத்தில் இடம் கிடையாது. கணவன் மனைவிக்கு அடித்தால் கணவன் மனைவியை தண்;டித்தால் அது குற்றமேயாகும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்' என்றார்.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X