Suganthini Ratnam / 2016 நவம்பர் 07 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவலடிப் பிரதேசத்தில்; பொலிஸாரின் சோதனைச்சாவடி இருந்த காணியானது குறித்த காணி உரிமையாளரிடம் கடந்த வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் உதவிச்சேவை அலுவலகத்தின் பணிப்புரைக்கு அமைய தனது காணியானது தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காணி உரிமையாளர் தெரிவித்தார்.
யுத்த காலத்தில் குறித்த காணியை பொலிஸார் கைப்பற்றி, அக்காணியில் சோதனைச் சாவடியை அமைத்திருந்தனர். இந்நிலையில், யுத்தம் முடிந்த பின்னர் அக்காணியில் காணப்பட்ட சோதனைச்சாவடி அகற்றப்பட்டபோதும், தனது காணியை கையளிப்பதற்குப் பொலிஸார் மறுத்துவந்தனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ் தலைமையகம், பிரதேச செயலாளர், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்டவற்றுக்கு தான் முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.
பொலிஸாரால் கையகப்படுத்தியிருந்த குறித்த காணியை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ் தலைமையக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் உதவிச்சேவை அலுவலகம் கடந்த செப்டெம்பெர் 24ஆம் திகதி விடுத்த பணிப்புரைக் கடிதத்தின் பிரதி 18.10.2016 அன்று தனக்கு கிடைத்தது.
சோதனைச்சாவடியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மண் அரண்கள், முள்வேலிகள், இரும்புக் கம்பித் தடைகள் இன்னமும் அக்காணியில் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
10 minute ago
21 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
3 hours ago
3 hours ago