Niroshini / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் மக்களின் நன்மை கருதி பொலிஸ் நடமாடும் சேவை காரியாலயம், ஞாயிற்றுக்கிழமை (30) நிலைய பொறுப்பதிகாரி ரசிக்க சம்பத் தலைமையில் ஆரம்பித்தது வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது அப்பிரதேச மக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராமசேவர்கள், பாடசாலை மாணவர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கிராமங்களின் அபிவிருத்திப் பணிகள், குறைபாடுகள் தொடர்பாக அடையாளம் காணப்பட்டு அதனை நிறைவேற்றி கொடுப்பது, வீதித்துப்பரவு, ஆலங்கள், பாடசாலைகள், வீதிகள் போன்றவற்றில் சிரமதானப்பணிகளை மேற்கொள்ளல் மக்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் நிலையப் பொறுப்பதிகாரி ரசிக்க சம்பத் தெரிவித்தார்.
இந்நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதற்காக களுவாஞ்சிகுடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்த தந்திரி ஆரம்பித்து வைத்தார்.

3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025