Suganthini Ratnam / 2017 ஜனவரி 25 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பக்கச்சார்பின்றி கடமையாற்ற வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளதை கௌரவிக்கும் நிகழ்வு, இராஜாங்க அமைச்சரின்; காத்தான்குடிப் பிராந்திய அலுவலகத்தில் திங்கட்கிழமை (23) இரவு நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, ' பொலிஸார் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுகின்ற அதேவேளை, மனித நேயத்துடனும் பணியாற்ற வேண்டும்.
சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு. அதேபோன்று, போதைவஸ்துப் பாவனையை ஒழிப்பது, போதைவஸ்தை ஒழிப்பதில் பொலிஸார் ஈடுபட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
8 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
37 minute ago
45 minute ago