2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'பிளாஸ்டிக் கொள்கலன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்'

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

கால்நடை வளர்ப்பாளர்கள் பாலை பிளாஸ்டிக் கொள்கலன்களில் கொண்டு செல்லப்படுவது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என  கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் உதயராணி குகேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கரடியானறு கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில்  சனிக்கிழமை(16) மாலை நடைபெற்ற எவசில்வர் கொள்கலன்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பண்ணைகளிலிருந்து பெறப்படும் பாலில் கிருமிகள் காணப்படுவதாக எங்களிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கால்நடை வளர்ப்பாளர்கள் தினமும் மாடுகளையும் தொழுவத்தையும் கழுவி சுத்தம் செய்வதன் மூலம் பாலில் கிருமிகள் பரவுவதைகக் கட்டுபடுத்த முடியும்.
 
சில பண்ணையார்கள் பாலினை பிளாஸ்டிக் கலன்கள் மூலம் கொண்டு பால்சேகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். பால் பிளாஸ்டிக் கொள்கலன்கலன்களில் வைக்கப்படுவதனால் அக்கொள்கலன் உஷ்னமடைந்து கிருமிகள் உருவாகக்கூடிய நிலை உருவாகும்.

எவசில்வர் கொள்கலன்களில் பாவனையின் மூலம் இவ்வாறான கிருமிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X