Kogilavani / 2016 நவம்பர் 21 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லதம்பி நித்தியானந்தன்
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரரை, வேறு ஒரு விகாரைக்கு இடமாற்றுமாறு ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர் ஏ.எம்.எம். தௌபீக் மற்றும் செயலாளர் ஏல்.எல்.எம். சபீல் நழீமி ஆகியோர் கையொப்பமிட்டு இக்கடிதத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ளனர்.
இக்கடித்தத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் ஒரு தாய் நிறுவனமாகும்.
இப் பிரதேசத்தில் இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதிலும், இனங்களுக்கிடையிலான சக வாழ்வு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதிலும் இப்பிரதேச மக்களின் சமூக,சமய கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாப்பதிலும் முன்னின்று உழைத்து வரும் நிறுவனமுமாகும்.
தற்போது நிலவும் நல்லாட்சி அரசாங்கத்தில், இன நல்லுறவு, இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்ற வேளையில் ஆங்காங்கே சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்களும் நடைபெற்று வருவதையும் தாங்கள் அறிவீர்கள்.
குறிப்பாக மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமனரத்திண தேரர் இப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கெதிராக மிகக் கேவலமான முறையில் தன்னுடைய செயற்பாடுகளை அண்மைக்காலத்தில் அரங்கேற்றி வருவதை தாங்கள் அறிவீர்கள்.
கடந்த யுத்தகாலத்தில் இந்நாட்டில் மூவின மக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், மேற்படி விகாராதிபதியின் மோசமான செயற்பாடுகள் மூவின சமூகத்தினரையும் பாதிக்கும் என நாம் அஞ்சுகிறோம்.
கிராமசேவை உத்தியோகத்தர், பொலிஸ் அதிகாரிகள் போன்றோரை அவர்களது பணியை நிறைவேற்ற விடாமல் இடையூறு செய்வதையும் ,மோசமான வார்த்தைகளை பிரயோகிப்பதையும் கைகலப்பில் ஈடுபடுவதையும் செய்திகள் ஊடாக தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
எந்த சமூகத்திலிருந்து இன நல்லுறவுக்கான அச்சுறுத்தல் வருமாக இருந்தாலும் அதற்கெதிரான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது தங்களின் தார்மீகக் கடமையாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவின் ஆட்சிக்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் மிக உச்ச நிலையில் இருந்ததை தாங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
எனவே, இன நல்லுறவை சீர் குலைக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி மதிப்பிற்குரிய சுமனரத்தின தேரரை, வேறு ஓர் இடத்துக்கு இடமாற்றி, சமூகங்களுக்கிடையிலான உறவுகளைப் பேணக்கூடிய ஒரு வரை மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு விகாராதிபதியாக நியமிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago