Niroshini / 2016 ஜூன் 29 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு- கொழும்பு, கோட்டைக்கு இடையிலான புகையிரத குளிரூட்டப்பட்ட சேவை தற்பொழுது இயங்கமால் இருப்பது தொடர்பில் முதலமைச்சருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து அச்சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அவர் அமைச்சரையும் அதிகாரிகளையும் கேட்டுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டிற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து உடனடியாக இது விடயமாக நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.
முதலமைச்சரின் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
மட்டக்களப்பிலிருந்து ஒவ்வொருநாளும் கொழும்பு கோட்டையை நோக்கிச் செல்லும் கடுகதி புகையிரத சேவையில் குளிரூட்டி பொருத்திய தனியான பகுதி இயங்கிவந்தது.
ஆனால், கடந்த இரண்டு வாரமாக அக்குளிரூட்டி பொருத்திய பெட்டி சேவையில் இல்லை என்றதும் வழமையான பயனிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
எனவே, மட்டக்களப்பில் இருந்து அதிக வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. உல்லாசப் பயணத்துறையை வளப்படுத்துவதற்காக கிழக்கு மாகாண சபை முழுமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கையில் இவ்வாறான செயற்பாடுகள் அதற்குத் தடையாக உள்ளன.
கிழக்கு மாகாணம், ஏனைய மாகாணங்களை விட சிறந்த மாகாணமாகவும் எதிலும் குறையற்ற அனைத்தும் எங்களாலும் முடியும் என்ற துணிவுடனும் ஒவ்வொன்றையும் செய்து கொண்டு வரும் இந்நிலையில் இப்படியான வேலைகள் கவலையளிப்பதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025