2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'மட்டக்களப்பில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் முன்னேற்றம் குறைவு'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 08 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம், பேரின்பராஜா சபேஷ்

நாடளாவிய ரீதியிலுள்ள பிரதேச செயலகங்கள் தோறும்; நல்லாட்சி அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் முன்னேற்றம் மிகக் குறைவாக காணப்படுவதாக கிராமியப்  பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்றுப் பிரதேச செயலக  ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (07) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் உரையாற்றுகையில், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் ஒப்பந்தக்காரர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதால், ஒரு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அனைத்து வேலைகளையும் ஒரு ஒப்பந்தக்காரர் பெற்றுக்கொண்டுச் செய்வதால், கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் என்ற அபிவிருத்தி வேலைகள் முன்னேற்றமின்றி குறிப்பிட்ட காலத்துக்குள்; வேலைகள் முடிபடாமல் காணப்படுகின்றது.

இவ்வாறு வேலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாமதமடைவற்கு மாவட்டச் செயலகம் அல்லது பிரதேச செயலகத்தினூடாக பகிரங்க மனுக் கோரல் செய்யப்படாது மாவட்டத்திலுள்ள  ஒப்பந்தக்காரர்கள் சங்கம் அவர்களுக்குள்ளயே அவ் ஒப்பந்த வேலைத்திட்டங்களை தங்களது அங்கத்தவர்களுக்குள்ளயே பிரித்து எடுத்துக் கொண்டு ஒருவருக்கு இரண்டு மூன்று ஒப்பந்த வேலைத்திட்டங்களுக்கு அதிகமான ஒப்பந்த வேலைகளை வழங்கியுள்ளதால் ஒருவர் குறிப்பிட்ட காலத்துக்குள்; அத்தனை வேலைத்திட்டங்களையும் செய்ய முடியால் காலத்தை இழுத்தடிப்பு செய்வதால் மட்டகளப்பு மாவட்டத்தில் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் முன்னேற்றமின்றி காணப்படுகின்றது.

இவ்வாறான வேலைத்திட்டங்கள் பகிரங்கமாக பத்திரிகைகளில் விலை மனு கோரல் செய்யப்பட்டு அதன் மூலம் ஒப்பந்ந வேலைகள் வழங்கப்படுவதன் மூலம் அபிவிருத்தி வேலைகளில் ஏற்படும் பின்னடைவுகளை தடுக்க முடியும் என்ற நோக்கத்தில் இப்பிரச்சினை தொடர்காக எதிர்வரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ள இணைத் தலைவர்கள் தீர்மானித்துள்ளோம்' என்றார்.

மேலும், மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள் நடைபெறும் தினங்களில் மாவட்டத்திலுள்ள அரசாங்க அதிகாரிகளை  மாகாணசபையில் நடைபெறும் கூட்டங்களுக்கு அழைத்துக்கொள்வதை தவிர்ப்பதற்கு அல்லது பொருத்தமான தினத்தில் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உட்பட மாகாண அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்புமாறு கிராமியப் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  
 
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு வருகை தராத அதிகாரிகள் தொடர்பில் நாம்; கண்டிப்பாக உள்ளோம் என்பதுடன், அந்த அதிகாரிகள் வருகை தராமைக்கான காரணத்தைக் கோரி   பிரதேச செயலாளர் உடனடியாக கடிதம் அனுப்ப வேண்டும். அதன் பிரதிகள் குறித்த திணைக்கள அமைச்சு, அமைச்சின் செயலாளர், ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கூறினார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிதி நிறுவனங்கள் நுண்கடன் திட்டத்தின் மூலம் அதிக வட்டிக்கு மக்களுக்கு பணம் வழங்குகின்றனர். அந்த நிலைமையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் பொறுப்பு சமுதாய அடிப்படை வங்கிக்கு உள்ளது. கோறளைப்பற்று வாழ்வின் சமுதாய அடிப்படை வங்கியில் நிலையான வைப்பில் ஒன்பது கோடி ரூபாய் உள்ளது. இந்த பணத்தின் மூலம் பிரதேச மக்களின் திட்டங்களுக்கு கடன் வழங்கி நிதி நிறுவனங்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
பிரதேசத்தில் 238 போஷாக்கு குறைந்த குடும்பங்களை வாழ்வின் எழுச்சி திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
 
பிரதேச பாடசாலை மாணவர்கள் மது மற்றும் புகைப்பிடித்தல் பாவனையில் அதிகம் ஈடுபடுகிறார்கள். இது தொடர்பாக பொலிஸார் விழிப்பூட்டல் செய்ய வேண்டும் என தெவிக்கப்பட்டது.
 
போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை பெற்று இரவு வேளையில் தொந்தரவு செய்வதாக பலர் முறைப்பாடு செய்வதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கல்குடா தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தார்.
 
இது ஒரு சமூகப் பிரச்சினையாகும். குறித்த விடயம் தொடர்பாக அனைவரும் அக்கறை செலுத்தவேண்டும். அச்சம் காரணமாக இலங்கங்கள் வழங்கப்படலாம். இது கலாசாரம் சார்ந்த பிரச்சினையாகும.; உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X