2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் புதிய பாலங்களை நிர்மாணிக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 மே 08 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமங்களுக்கு இடையிலான போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் புதிய பாலங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சந்திவெளி -திகிலிவெட்டை, நரிப்புல்தோட்டம் -பங்குடாவெளி, கிண்ணையடி -முறுக்கன்தீவு, மூங்கிலாற்றுப் பாலம் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,  கிரான் பாலம் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்  மாவட்ட  அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான ஞா.ஸ்ரீநேசன் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனும் பொறியியலாளர்களும் இந்தப் பாலங்களை நிர்மாணிப்பது தொடர்பான செலவு மதிப்பீட்டை மேற்கொண்டு, பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ள இடங்களையும் சனிக்கிழமை (07) பார்வையிட்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X