Suganthini Ratnam / 2016 மே 29 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-றியாஸ் ஆதம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதைவஸ்துப் பாவனையும் போதைவஸ்து விற்பனையும் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இவற்றை ஒழிப்பதற்கு பொலிஸாருக்கு உதவியாக பொதுமக்கள் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
ஏறாவூர் நஜ்முல் உலூம் சர்வதேச பாடசாலைக்கு ஒருதொகுதி தளபாடங்களை கையளிக்கும் நடவடிக்கை சனிக்கிழமை (28) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'குறிப்பாக, இலங்கையில் தற்போது சட்டபூர்வமான மது, சிகரெட் மூலம் அரசாங்கத்துக்கு அதிக வரி கிடைக்கும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இரணடாம் மூன்றாம் இடங்களில் உள்ளது.
போதைவஸ்துப் பாவனைக்கு அடிமைப்பட்டு இளைஞர் சமூகம் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்ற நிலைமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது' என்றார்.
'சமூகச் சீரழிவை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாக இது மாறியுள்ளது. போதைவஸ்துப் பாவனையை இல்லாது ஒழிப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, இவ்விடயத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருப்பதுடன், பொலிஸாருக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
6 minute ago
22 minute ago
25 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
25 minute ago
45 minute ago