2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 265 மகளிர் விவசாய அமைப்புகள்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 17 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பில் மகளிர் விவசாய அமைப்புகள் 265 பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் என்.சிவலிங்கம் தெரிவித்தார்.

இந்த அமைப்புகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

'நஞ்சற்ற உணவை நாமே உற்பத்தி செய்வோம்' எனும் தொனிப்பொருளிலான தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ், வீட்டுத் தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஜெயந்திபுரத்தில்  நேற்று (17 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது, பதிவு செய்யப்பட்ட மகளிர் விவசாய அமைப்புகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், வீட்டுத் தோட்ட செய்கையாளர்களுக்கு உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X