2025 மே 08, வியாழக்கிழமை

'மட்டு. அபிவிருத்திக்குழுத் தலைவர் பதவி த.தே.கூ. க்கு கிடைத்திருக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்க வேண்டும். அவ்வாறு கிடைக்காத பட்சத்தில், பதவி வழி இணைத்தலைவர் பதவியையும் விடுத்து, மேலதிக இணைத்தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கவேண்டும். இது இனவாதம் அல்ல இன உரிமையாகுமென கூட்டமைப்பினுடைய மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவராக பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி நியமிக்கப்பட்டமை தொடர்பில்  இன்று திங்கட்கிழமை கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்குமென  மக்கள் மத்தியில் செய்திகள் வெளியாகிய நிலையில், அப்பதவி பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர் அலிக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி மக்களுக்கு  ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது' என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவீதம் தமிழ் மக்கள் வாழ்கின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 03 நாடாளுமன்ற  உறுப்பினர்கள் தெரிவாகிய நிலையில் 25 சதவீதமுள்ள முஸ்லிம் மக்களுக்கு 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி வழி இணைத்தலைவர் பதவி கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கு வழங்கும்போது, மேலதிக இணைத்தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X