Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 10 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நடைபெற்று முடிந்த இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மூவர் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ள அதேவேளை,அந்த மாவட்டத்துக்கு மேலும் ஓர் உறுப்பினரைப் பெறும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைரூஸ் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில்,
ஏற்கெனவே, தொகுதி அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மூன்று தொகுதிகளுக்கும் தலா ஒருவர் என்ற அடிப்படையில் மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கல்குடா மற்றும் பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகள் தலா ஒவ்வொரு அங்கத்தவருக்கான தொகுதிகளாகும்.
ஆனால்,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்புத் தொகுதி என்பது இரட்டை அங்கத்தவர் தொகுதியாகும்.
முறைப்படி அத்தொகுதியிலிருந்து இரண்டு அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.
எனினும், தற்போதைக்கு இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்புத் தொகுதியிலிருந்து ஒரு இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆகையால், இந்தத் தொகுதிக்குக் கிடைக்க வேண்டிய மற்றுமொரு உறுப்பினரையும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அடுத்ததாக உள்ள உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago