2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டு. வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 17 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  புற்றுநோயியல் பிரிவுக்காக அமைக்கப்பட்ட நவீன சத்திர சிகிச்சைக் கூடத்தில் புற்றுநோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவ்வைத்தியசாலைப் பணிப்பாளர் எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் 3 கோடி ரூபாய் நிதி உதவியுடன் கிழக்கு மாகாணத்தின் முதலாவது நவீன சத்திர சிகிச்சைக் கூடம் இவ்வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொழும்பு, கண்டி மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளிலேயே இத்தகைய நவீன வசதி கொண்ட சத்திர சிகிச்சைக் கூடங்கள் இயங்கி வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X