2025 மே 09, வெள்ளிக்கிழமை

'மட்டு. விவசாய சமூகம் இயற்கை அழிவுகளால் பாதிப்படைகின்றது'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாய சமூகம் வருடம் தோறும் ஏற்படும் இயற்கை அழிவுகளால் நேரடியாகப் பாதிப்படைவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா, இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இம்மாவட்டத்திலுள்ள குளங்களும் வாய்க்கால்களும் புனரமைக்கப்பட வேண்டும். ஆனால், றூகம் மற்றும் கித்துள் குளங்கள் புனரமைப்பில் பல வருடங்களாக புறக்கணிக்கப்பட்டிருந்த காரணத்தினால் நீர்ப்பாசன நோக்கங்களுக்காக இந்தக் குளங்களை நம்பியுள்ள விவசாயிகள் பாதிப்படைகின்றார்கள்.

கட்டுக்கலியாகுள வாய்க்கால், வெள்ளைக்கல்லுமலை, நெடியவெட்டைக் குளங்களை புனரமைப்பதில் கவனம்  செலுத்துமாறு கமத்தொழில் அமைச்சரை தான் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கமத்தொழில் அமைச்சின் நிதியொதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்திலும் பிரஸ்தாபித்துள்ளேன்.

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயத்தின் பிரதி ஆணையாளர் அவர்களால் தயாரிக்கப்பட்ட மேற்படி குளங்களுக்கான நிர்மாண வேலைத்திட்டத்தின் மதிப்பீட்டறிக்கையையும் தான் அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X