2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மண்முனை தென்னெருவில்பற்றில் 280 அபிவிருத்தித் திட்டங்கள்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 11 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மண்முனை தென்னெருவில்பற்றுப் பிரதேசத்தில் கடந்த வருடம் 280  அபிவிருத்தித் திட்டங்கள்  மேற்கொள்ளப்பட்டதாக அப்பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்காக 136.283 மில்லியன் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியை உரிய முறையில் பயன்படுத்தி, அபிவிருத்தித் திட்டங்களை கடந்த டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னராகப் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வாழ்வாதார மேம்பாட்டு அபிவிருத்தித் திட்டம், கிராமிய உட்கட்டமைப்பு வேலைத்திட்டம், போஷாக்கு வேலைத்திட்டம், திவிநெகும வேலைத்திட்டம், அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டம் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X