2025 மே 08, வியாழக்கிழமை

'மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நல்லாட்சி நிலைத்திருக்க வேண்டுமாயின், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு நாவற்குடா விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவக மண்டபத்தில்  இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மனித உரிமையென்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்ற பிரிக்க முடியாததொன்றாகும். அவ்வுரிமையை எவரும் கொடுக்கத் தேவையில்லை.

ஒரு நாட்டில் நல்லாட்சியை நிலைத்திருக்கச் செய்வோமாக இருந்தால், மனித உரிமைகளை மதித்திட வேண்டும்.
கடந்த காலங்களில் எமது நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுக்க அச்சப்பட்டனர். இன்று மனித உரிமைகள் மீறுவோர்கள் சட்டத்திற்கு முன் கொண்டு வரப்பட்டு தண்டனை பெற்று வருகின்றனர். மக்களின் மனங்களை வென்றெடுக்கும் வகையில் இந்நாட்டில் உரிமைகள் அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி அனுபவிப்பதற்கான  முன்னெடுப்புக்கள் அனைத்து தரத்தவர்களாலும் உத்தரவாதப்;படுத்தப்பட வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X