Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எம்.அஹமட் அனாம்
ஊழியர்களின் சார்பில் செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி 10 பில்லியன் ரூபாய் செலுத்தப்படாததால் இலங்கைப் போக்குவரத்துச் சபை நிருவாகம் மறியலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள இலங்கை போக்குவரத்துச்சாலைகளின் நிலைமைகளை நேரில் அறிந்து கொள்வதற்காக அவர் மேற்கொண்ட விஜயத்தின் ஒரு கட்டமாக ஞாயிற்றுக்கிழமை அவர் ஏறாவூர்,வாழைச்சேனை இலங்கை போக்குவரத்து சாலைக்கு விஜயம் செய்தார்.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை போக்குவரத்துச்சபையின் உண்மை நிலையை நான் உங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், சிலருக்கு உண்மையைச் சொன்னால் பிடிக்காது.
உண்மையான நிலையை அறிந்து கொண்டால்தானே தவறுகளை நாங்கள் சீர்செய்து கொள்ளமுடியும்.
மேற்சொன்ன இந்த 10 பில்லியன் ரூபாய் தொகைக்கு மேலதிகமாக இலங்கைப் போக்குவரத்துச்சாலை செலுத்த வேண்டிய கடன் தொகை 3 பில்லியன் ரூபாய் உள்ளது.
இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றைச் செலுத்தவில்லை என்ற காரணத்துக்காக நான் மறியலுக்கு செல்வதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.
இந்தத் தொகையைப் பெற்று அதனைச் செலுத்தி முடிப்பதற்கு நாம் இப்போது பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளோம்.
இந்தத் தொகைகளை மீளப் பெற்றுக் கொள்வதாயின் இலங்கையிலுள்ள அனைத்துச்சாலைகளும் இலாபகரமான முறையில் இயங்க வேண்டும். அதற்கான முயற்சிகளிலேயே நாம் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
இந்த விஜயத்தின்போது அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர, உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago