Niroshini / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிலாலி வேம்பு பகுதி மக்களுக்கு போரதீவுப்பற்று பிரதேச சபையினால் இவ்வருடம் மே மாதம் முதல் பவுசர் மூலம் குடிநீர் வழங்கபட்டு வந்தன.இவ்வாறு வழங்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த 24.10.2015 அன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
அக்காலப்பகுதியில் நாள் ஒன்றுக்கு 72,000 லீற்றர் குடி நீர் மக்களுக்காக தாம் வழங்கி வந்ததாகவும் தற்போது இப்பகுதியில் வட கீழ் பருவ பெயர்ச்சி மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் கடந்த 24.10.2015 அன்றிலிருந்து தமது குடி நீர் வழங்குவதை நிறுத்தியுள்ளதாகவும் தற்போது போரதீவுப்பற்று பிரதேசத்தில் பவுசர் மூலம் குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
5 minute ago
16 minute ago
23 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
23 minute ago
42 minute ago