Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
புதிதாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள விசேட அபிவிருத்தி அமைச்சானது மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கபளீகரம் செய்யும் வகையில் செயற்படுமாயின், அத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்காது என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் புனரமைக்கப்பட்ட வீதியை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (24) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,'விசேட அபிவிருத்தி அமைச்சர்களை உருவாக்கும் கருத்து தற்போது அரசாங்கத்தின் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது, குறிப்பாக, இது தொடர்பான கருத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிடுகின்றார். விசேட அபிவிருத்தி அமைச்சர்களை உருவாக்குவதன்; மூலம் பொருளாதார அபிவிருத்திகளை துரிதமாகச் செயற்படுத்த வேண்டும் என்பதில் நாம் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை' என்றார்.
'மாகாணங்களின் அதிகாரங்களைப் பலப்படுத்தி, நிதி வருவாயைப் அதிகரித்து, மக்களுக்கு கூடுதலான பணிகளைச் செய்யவேண்டிய நிலைமையில் உள்ளோம்.
எமது மக்களைப் பொறுத்தவரையில் அரசாங்கம் நேர்மையாகச் செயற்பட்டால், ஏற்றுக்கொள்வார்கள். பாராபட்சத்துடன் செயற்பட்டால் எதிர்ப்பார்கள்' எனவும் அவர் கூறினார்.
23 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
3 hours ago