2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் பயன்படுத்த முடியாத நிலைமை'

Suganthini Ratnam   / 2016 மே 31 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அரசியலமைப்பு ரீதியாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் பயன்படுத்த முடியாதவாறு  போடப்படுகின்றன என  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள புதிய வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (30)  திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'எமது நாட்டு அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களுள் ஏழு மாகாணங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை. ஆனால் வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாண சபைகளுக்கு மாத்திரம் அவ்வதிகாரங்களைப் பாவிக்க விடாமல் தடுக்கின்ற சூழ்நிலை காணப்படுகின்றது. இதனாலேயே, இவ்விரு மாகாண முதலமைச்சர்களும் ஆளுநர்களுடனும் அதிகாரிகளுடனும் முரண்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது' என்றார்.

'மாகாண சபைகளுக்கான கடமைகளை வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களும் வேறு சக்திகளின் எவ்வித தடைகளும் இன்றி சுதந்திரமாக மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்போதே, அபிவிருத்திப் பணிகளை இலகுவாக முன்னெடுக்க முடியும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X