Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாரிய தாக்கம் செலுத்தும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் நேற்று(21) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரிய சவாலை எதிர்கொண்டிருந்தது. அந்த அனைத்து சவால்களையும் முறியடித்து கட்சிக்கு அதிகப்படியான ஆசனங்களை வென்றெடுக்கும் பொருட்டு அதிகளவிலான வாக்குகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வழங்குமாறும் அவ்வாறு வாக்களிக்கப்பட்டு அவ்வூருக்கு கட்சியினுடாக நாடாளுமன்ற ஆசனம் கிடைக்காத பட்சத்தில் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படும் எனவும் கட்சியின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தேர்தல் பிரசாரத்தின்போது பல ஊர்களுக்குச் சென்று வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.
தலைவரின் வாக்குறுதியை முழுமையாக நம்பி வாக்களித்த மக்கள் இன்று நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை முழுமையாக இழந்து அனாதரவாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசியப்பட்டியல் விவகாரம் கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்படும் என்பதுடன் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் வசமிருந்த சில உள்ளூராட்சி சபைகளின் அதிகாரமும் கேள்விக்குறியாகலாம்.
எனவே,எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் உறுப்பினர்கள் பலர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதும் மக்களால் ஒதுக்கப்படுவதும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் தேசியப்பட்பட்டியல் சம்மந்தமான இறுதி முடிவிலேயே தங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago