Suganthini Ratnam / 2016 ஜனவரி 12 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் ஓரங்கட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டுமென மு.கா. வின் ஏறாவூர்க்கிளை கொள்கைப் பரப்புச் செயலாளர் யூ.எல்.முஹைதீன் பாவா, இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் மு.கா. வின் பிரதித் தலைவருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கு தான் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'அபிவிருத்தித் திட்டங்கள், கட்சி சம்பந்தப்பட்ட விடயங்கள் மற்றும் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் விடயங்கள்; பற்றிக் கலந்தாலோசிக்கும்போது மூத்த உறுப்பினர்கள் ஓரங்கட்டப்படுவது இந்தச் சமூகத்துக்கு அதிக இழப்புக்களைத் தரும்' என்றார்.
'மு. கா. வை ஸ்தாபித்தவர்களில் ஒரு சிலரே இன்னமும் உள்ளனர். இத்தகையவர்களின் அனுபவங்கள் இந்தச் சமுதாயத்தின் சொத்துக்களாக மதிக்கப்பட வேண்டும்.
நாட்டில் ஆயுத வன்முறைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஜனநாயகப் பாதையில் செல்ல வேண்டுமென்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஸ்தாபிக்கட்டது. அவ்வேளையில் அதன் ஸ்தாபகர்கள் உயிர் அச்சுறுத்தல் தொடக்கம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு, தியாகங்களைச் செய்து மு.கா. வைக் கட்டிக்காத்தனர். இந்நிலையில், அவர்கள் இப்பொழுது ஓரங்கட்டப்படுவது வேதனைக்குரியது.
மூத்த உறுப்பினர்களுக்கு கௌரவமளித்து, அவர்களின் நலனோம்பு விடயங்களில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
3 minute ago
7 minute ago
16 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
7 minute ago
16 minute ago
21 minute ago