Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 24 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கடந்த 30 ஆண்டுகாலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் சுகாதார தேவையை முதலில் விருத்தி செய்ய வேண்டிய அத்தியாவசியம் எனக்குள்ளது என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வந்தாறுமூலை மத்திய ஆயுள்வேத மருந்தக திறப்பு விழா கிழக்கு மாகாண சுதேச ஆணையாளர் ஆர்.சிஸ்ரீதர் தலைமையில் நேற்று (23) இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாணத்திலுள்ள பல பிரதேசங்களில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இன்று வரை அவர்கள் மிகச் சரியான வைத்திய சேவைகளை பெறவில்லை என்றுதான் நான் கூறுவேன்.
அந்த மக்களுக்கு உரிய நேரத்தில் தங்களின் காலடியில் சரியான வைத்திய சேவைகளை வழங்குவதற்கு சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்து வருகின்றேன்.
அதன் முதற்கட்டமாக வந்தாறுமூலை கிராம மக்களுக்கென ரூபா 50 இலட்சம் ரூபாய் செலவில் மத்திய ஆயுள்வேத மருந்தகம் ஒன்றை நிர்மாணித்து இக்கிராம மக்களுக்கு ஆயுள்வேத வைத்திய சேவையினை அவர்களின் காலடியில் வழங்குவதற்காக வைத்தியர்களையும் ஊழியர்களையும் நியமித்து மருந்து மாத்திரைகளையும் வழங்கியுள்ளோம்.
இந்த கட்டிட்டம் 50 இலட்சமாக ரூபாவாக இருந்தாலும் இங்கு மேற்கொள்ளயிருக்கும் வைத்திய சேவையின் பெறுமதியை யாராலும் கணிப்பிடமுடியாது. இன்று மனிதனை ஆட்டிப்படைக்கின்றவைகளில் ஒன்றுதான் தனக்குள் இருக்கும் நோயாகும். இந்த நோய்களை கண்டுபிடிக்க வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் செய்யும் வைத்திய சேவைக்கு நிகரே இல்லை.
மக்களின் சுகாதாரமே எனது தேவையாகும். இச்சேவையை மக்களுக்கு வழங்க நான் யாரிடமாவது சென்று சுகாதார சேவையை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
3 hours ago