2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மீனவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 13 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  பன்சேனை கண்டியனாறுக் குளத்திலிருந்து மீனவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.

கண்டியனாறுக் குளத்துக்கு சனிக்கிழமை (12) மாலை மீன்பிடிக்கச் சென்ற சில்லுக்கொடியாறு கிராமத்தைச் சேர்ந்த 12 பிள்ளைகளின் தந்தையான வீரக்குட்டி வேலாப்போடி (வயது 72) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குளத்தின் சேற்றுக்குள் சடலம் புதையுண்டு காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X