Niroshini / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்பிய முப்படையினர், அரச அதிகாரிகள் கௌரவிக்கப்படவுள்ளதாக அலுத்கம அபிவிருத்தி மன்றம் அறிவித்துள்ளது.
ஒக்டோபர் 14ஆம் திகதி புதன்கிழமை பின்னேரத் தொழுகையினை அடுத்து தர்காநகர், சாவிய வீதியிலுள்ள தெருப் பள்ளிவாசலில் அளுத்கம அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் ஹுஸைன் ஸாதிக் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, களுத்துறை மாவட்ட செயலாளர் யூ.டி.சி. ஜயலால், மேல் மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவல மற்றும் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது,கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அளுத்கம, தர்கா நகர், வெலிப்பன்ன, பேருவளை மற்றும் துந்துவ நகரினை மீளக் கட்டியொழுப்பிய இராணுவ வீரர்கள், விமானப் படையினர், கடற் படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 500 பேர் நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago