Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 14 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
முஸ்லிம்களின் குரலை ஒடுக்க இனவாதிகள் மீண்டும் முயன்று வருவதாக ஸ்ரீல.மு.கா ஏறாவூர் கிளை கொள்கை பரப்புச் செயலாளரும் றிபாய் பள்ளிவாயல் தலைவருமான யூ.எல். முஹைதீன் பாவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
இந்த நாட்டில் முஸ்லிம்களின் குரலாக செயற்பட்டு வருகின்ற அமைப்புக்களையும் புத்திஜீவிகளையும் மத்ரசாக்களையும் பள்ளிவாசல்களையும் பேரினவாதிகள் குறிவைத்துள்ளனர்.
அதன் ஓர் அங்கமாக கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஒற்றுமையுடன் குரல் கொடுத்து வருகின்ற நவமணி பத்திரிகை அலுவலகத்தை உடைக்க ஒரு தீவிரவாதி முயன்றிருப்பது இன வெறியர்களின் கை இந்த நல்லாட்சியிலும் மேலோங்குகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
கடந்த மஹிந்த யுகத்தில் முஸ்லிம்களும் ஏனைய சிறுபான்மையினரும் அச்சத்துடனும் பீதியுடனும் காலங்கழிக்க வேண்டியேற்பட்டது.
அதனை மாற்றி இந்த நல்லாட்சியைக் கொண்டு வந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கிடையில் இனவாதிகளின் அச்சுறுத்தல் இந்த நாட்டு சிறுபான்மையினரை மீண்டும் கலங்க வைக்க ஆரம்பித்திருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago