Suganthini Ratnam / 2016 மே 23 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
கடந்த கால யுத்த சூழல் தமிழ் மக்களை பல வகையிலும் பின்தள்ளப்பட்டவர்களாக மாற்றியுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
பல துறைகளிலும் பின்னடைவு கண்டுள்ள தமிழ் மக்கள், தற்போது ஓரளவுக்கு முன்னேறி வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, துறைநீலாவணை கண்ணகி அம்மன் கோவில் நிர்வாகத்தினரின்; ஏற்பாட்டில் 31 சேவையாளர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (22) இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தமிழர்களை மதம் மாற்றும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் திட்டமிட்டு மதம் மாற்றப்பட்டும் இருக்கின்றனர். இந்து மதம் பழமை வாய்ந்ததாகும். ஆனால், தற்போது எமது மதத்தின் நிலைமையை சற்றுச் சிந்தித்துப் பார்க்கவேண்டியவர்களாக உள்ளோம்' என்றார்.
'இவர்கள் மதம் மாறுவதற்கான காரணம் என்ன என்பதை அறிய வேண்டும். தமிழ் இனம் எதிர்காலத்தில் நிலைத்திருக்கக்கூடியதாக இருக்கின்றதா என்பதனை ஆழமாகப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago