2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'யுத்த வலி, வேதனையுடன் பல குடும்பங்கள் வாழ்கின்றன'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

யுத்தத்தின் வலியையும் வேதனையையும் சுமந்துகொண்டு எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றன. அக்குடும்பங்களை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவை தமிழ்ச் சமூகத்துக்கு உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்;தார்.

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 7ஆவது தமிழியல் விருது விழா, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற எத்தனையோ குடும்பங்களின் வலிகளை அரசாங்க அதிபர்களாகிய நாம் உணர்ந்துள்ளோம்.

அரசியல், எல்லை, இனம், மதம் ஆகியவற்றுக்கு அப்பால் சமூகத்தில் ஆற்றவேண்டிய பணி பாரிய சுமையாக உள்ளது.  
எங்களுடைய இந்தக்காலம் இலக்கியத்திலே சொல்லப்படுகின்ற சங்க காலம், சங்கம் அருவிய காலம் என்ற காலம் போய் வலிகள் நிறைந்த காலம் வேதனைகள் நிறைந்த காலம் நிச்சயம் வரலாற்றாக மாற்றப்பட வேண்டும் அவைகள் இலக்கியமாக மாற்றப்படல் வேண்டும்.

மற்றமொழியிலும் இலக்கியங்கள் படைக்கப்படல் வேண்டும். மற்றவர்களும் எமது வேதனைகளை புரிந்து கொள்ள எமது எழுத்துக்கள் மாற்றப்படல் வேண்டும். இந்த வேதனைகள் உலகுக்கு எடுத்துக்காட்டப்படல் வேண்டும்.
அதற்கு இந்த எழுத்தாளர் ஊக்குவிப்ப மையம் போன்ற பலர்; முன்வரவேண்டும்;' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X