Niroshini / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வின் எழுச்சி பயனாளிகளின் மாதாந்த வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் 5,565,000 ரூபாய் நிதியில் வாழ்வாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிரான் பிரதேச திவிநெகும தலைமை முகாமையாளர் முத்துலிங்கம் கலாதேவன் தெரிவித்தார்.
கிரான் பிரதேச செயலக மண்டபத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற வாழ்சின் எழுச்சி பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
வாழ்வின் எழுச்சி வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ்; கிரான் பிரதேச செயலக பிரிவில் இந்த ஆண்டு 5,565,000 ரூபாய் நிதியில் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளளோம். இதன் முதற் கட்டமாக ஒரு மில்லியன் ரூபாய் நிதியில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிணங்க,பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 13 பேருக்கு தையல் இயந்திரங்கள், 17 பேருக்கு சைக்கிள்கள், மாஅரைக்கும் இயந்திரம், பயிர் செய்கையாளர்களுக்கு நீர்பம்பிகள், சோளம் பொரி இயந்திரம் போன்றன வழங்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும்,வாழ்வின் எழுச்சி பயனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்திட்டங்களை பயனாளிகள் சரியான முறையில் பயன்படுத்தி தமது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் செயற்படவேண்டும். இதனை எமது உத்தியோகத்தர்கள் கண்காணிக்கவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025