Suganthini Ratnam / 2017 ஜனவரி 22 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, காணாமல் போனவர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகளை கடந்த வெள்ளிக்கிழமை (20) வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சந்தித்துக் கலந்துரையாடினார்.
எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வின்போது, கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் இந்தச் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டதாக வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், வளத்தாப்பிட்டி, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய பிரதேசங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சொலை, வவுணதீவு ஆகிய பிரதேசங்களுக்கும் அவர் சென்றிருந்தார்.
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், யுத்தத்தில் அங்கவீனமானோர் ஆகியோரைச் சந்தித்ததுடன், அவர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அவர் கேட்டறிந்துகொண்டார்.
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago