2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடிச்சல் கிராமத்தில் குழாய்நீர் விநியோகத் திட்டம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வடிச்சல் கிராம மக்களுக்கு உறுகாமம் குளத்திலிருந்து நீரைப் பெற்று சுத்திகரிப்புச் செய்து குழாய்நீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இதற்காக நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சு 3 மில்லியன் ரூபாயை முதற்கட்டமாக  ஒதுக்கியுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம்.ஷயீட் தெரிவித்தார்.

வடிச்சல் கிராமத்தில் வாழ்ந்துவந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள், 1985ஆம் ஆண்டு இடம்பெற்ற இன வன்செயல் காரணமாக இடம்பெயர்ந்திருந்தன. தற்போது அக்குடும்பங்கள் தங்களின் சொந்த முயற்சியில் தங்களது இடங்களில் மீள்குடியேறி வருகின்றன.

இக்கிராமத்தில் மீள்குடியேறியுள்ள 58 குடும்பங்கள்; குடிநீருக்கு சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றன. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இதனை அடுத்து,  இக்கிராம மக்களுக்கு குழாய்நீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இக்குழாய்நீர் விநியோகத்துக்கான வேலைத்திட்ட வரைவு மற்றும் ஆவணங்கள் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிராமிய நீர் விநியோகத்திட்ட நிர்மாண பிராந்திய முகாமைப் பொறியியலாளர் ஏ.எல்.எம்.பிர்தௌஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவுக்கு கடந்த 30ஆம் திகதி எழுத்து மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X