2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

16 வயது சிறுமியை கடத்திச் சென்றவர் கைது

Sudharshini   / 2016 மே 07 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக கூறப்படும், அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை சந்தேகத்தின் பெயரில் கொக்கட்டிச்சோலை பொலிஸார்; நேற்று (06) இரவு கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த மாதம் 27ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவில் மாலை நேர வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புக்கொண்டிருந்த மேற்படி சிறுமையை, முச்சக்கரவண்டியில் வந்த நபர்; கடத்திச் சென்றுள்ளார் என சிறுமியின் பெற்றோர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 27ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்ட தமது மகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை என, சிறுமியின் பெற்றோர் புதன்கிழமை (4) மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் மீண்டும் முறைப்பாடு செய்தனர்.

இந்நிலையிலேயே நேற்று நேற்று இரவு 10 மணியளவில்,  கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன் சிறுமியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X