Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளத்தையும் அதுபோல் வரட்சியையும்; கட்டுப்படுத்துவதற்கான திட்ட வரைபுகள் முன்வைக்கப்பட்டு நிதி வசதி பெறப்பட்டு இதற்குரிய செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். இதன் மூலம் இந்த மாவட்டத்தினுடைய வெள்ளம், வரட்சி ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் குறைப்பதற்கான முடுழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்; தெரிவித்தார்.
சர்வதேச அனர்த்த அபாயக் குறைப்பு தினத்தையிட்டு மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'அனர்த்தம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சொந்தமாகிப் போய்விட்ட தொன்றாகும். வெள்ளம், வரட்சி மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களுக்கு இங்குள்ள மக்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள். அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்வது எவ்வாறு, அனர்த்தங்களோடு வாழ்வது எவ்வாறு, அனர்த்தங்களிலிருந்து மீண்டெழுவது எப்படி, அனர்த்தங்களோடு வாழப் பழகிக் கொள்வது எவ்வாறு போன்ற விடயங்களை உள்ளடக்கி அனர்த்த செயற்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3, 4 வருடங்களாக அனைத்து அனர்த்த வேளைகளிலும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பூரண உதவிகளை நல்கி வருகின்றது. அதனூடாக மக்களின் அனைத்து செயற்பாடுகளையும் நாம் நேர்த்தியாக செய்திருக்கின்றோம்.
2014ஆம் ஆண்டு 8 தண்ணீர் பவுசர்களை பிரதேச சபைகளுக்கு பகிர்ந்தளித்திருந்தோம். கடந்த வாரம் 80க்கும் மேற்பட்ட நீர்த்தாங்கிகளை பிரதேச சபைகளுக்கு வழங்கியிருந்தோம், அத்தோடு நீர் வழிந்தோடக்கூடிய பல நீர்க் கால்வாய்களை புனரமைப்புச் செய்திருக்கின்றோம்.
மூந்தனை ஆற்றிலிருந்து அது கடலோடு சங்கிமிக்கின்ற இடம் வரையில் செயற்பாடுளை மேற்கொள்வதற்கு உலகவங்கி தற்போது ஆய்வுகளை செய்து கொண்டிருக்கின்றது. இந்த மாவட்டத்தின் வெள்ளத்தையும் அதுபோல் வரட்சியைம் தீர்ப்பதற்கான படிமுறைகள் ஏறக்குறைய இன்னும் ஒரு வருட காலத்துக்குள்; முடிவுறுத்தப்பட்டு அதற்கான திட்ட வரைபுகள் முன் வைக்கப்பட்டு நிதி வசதி பெறப்பட்டு இதற்குரிய செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். இதன்மூலம் இந்த மாவட்டத்தினுடைய வெள்ளம் வரட்சி இரண்டும் ஒரே நேரத்தில் குறைப்பதற்கான முடுழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
உலக வங்கியின் உதவியோடு மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு 880 மில்லியன்; ரூபாய் வழங்கப்பட்டு, வெள்ள அணைகள் உட்பட பல்வேறு உட்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றினை விட 280 மில்லியன் ரூபாய் செலவில் கோட்டமுனைப் பாலம் உயர்த்தும் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
றூகம் மற்றும் கித்தூள் ஆகிய இரண்டு குளங்களையும் இணைப்பதனூடாக மேலதிகமாக வெளியேறும் நீரை 60 வீதம் தேக்கி விவசாயத்துக்கு மட்டுமல்லாது, உட்கட்டமைப்பு வேலைகளையும் மேற்கொள்ளும் பொருட்டு பிரான்ஸ ஏ.பி.சி. எனும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கின்றோம். எதிர்வரும் 2017ஆம் டிசெம்பர் மாதத்துக்குள் இதற்கான வேலைகளை ஆரப்பிப்பதற்கு அந்நிறுவனம் உறுதிமொழி வழங்கியுள்ளது. இவ்வாறான பாரிய திட்டங்களிளூடாக இம்மாவட்டத்திலுள்ள மக்கள் இங்கு ஏற்படும் வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு நிலைத்திருக்கின்ற அபிவிருத்தியை நோக்கி இம்மாவட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும். அபிவிருத்தி என்பது சரியாகத்திட்டமிட்டு சரியான நிபுணத்துவ ஆலோசனைகளுடன் மக்களின் பங்களிப்போடு நடைமுறைப்படுத்தப்படும்' என்றார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago