Niroshini / 2015 நவம்பர் 22 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
பண்ணையாளர்களின் உற்பத்தியை அதிகரித்து வருமானத்தை பெறும்வகையில் கிழக்கு மாகாணத்தில் 13.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி அபிவிருத்தி சுகாதார திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் உதயராணி குகேந்திரன் தெரிவித்தார்.
கால்நடை உற்பத்தி அபிவிருத்தி சுகாதார திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக சனிக்கிழமை(21) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்.
கால்நடை உற்பத்தி அபிவிருத்தி சுகாதார திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 150 புதிய பண்ணையாளர்களுக்கு மாடுகளை கொள்வனவு செய்து வளர்பதற்காக 1.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட 30 ஆடு வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் கொட்டில்கள் அமைப்பதற்கு வழங்கி அவர்களை ஊக்குவித்துள்ளோம்.
கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கோடு தெரிவு செய்யப்பட்ட 1,040 கோழி வளர்ப்பவர்களுக்கு 9.6 மில்லியன் ரூபாய் செலவில் கோழிக் குஞ்சுகள் தலா 20 வீதம் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும்,தெரிவு செய்யப்பட்ட 60 பண்ணைகளில் கன்றுகளைப் பராமரிப்தற்கும் உணவு மற்றும் பூச்சி மருந்து வழங்கி 18 மாதங்களில் கன்றுகளை ஈன்று எடுக்கும் வகையில் 6 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
60 பண்ணைகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆடுகளுக்கு அடையாளமிட்டு உரிமைப் பத்திரம் வழங்குவதற்காக மூன்று இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
புல் வளர்ப்பதற்காக 50 சதவீத மானிய அடிப்டையில் அதற்கான உபகரணங்களை வழங்கியுள்ளளோம்.
எங்களுடைய பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படும் பால் பிரதேச மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக பால் கொள்வனவு செய்து விற்பனை செய்பவர்களுக்கு 20 சைக்கில்களை வழங்கவுள்ளோம்.
போஷாக்குள்ள பரம்பரையை உருவாக்கும் முகமாக, பாலர் பாடசாலைகளுக்கு சூடாக்கிய பால் வழங்கவதற்கு 16 இலட்சம் ரூபாய் செலவிடவுள்ளோம்;.
இதேவேளை,செங்கலடி மற்றும் சத்துருக்கொண்டான் பகுதிகளிலுள்ள கால்நடைகளுக்குரிய உணவு உற்பத்தி தொழிற்சாலைகளை மீள புனரமைக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
51 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago