Suganthini Ratnam / 2016 மே 01 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்நோக்கிவந்த நீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை திங்கட்கிழமை முதல் மாதுறுஓயா குளத்திலிருந்து நீரைப் பெற்றுத் தருவதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் உறுதியளித்தனர்.
வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 8,245 ஏக்கரில் விவசாயச் செய்கையில் ஈடுபடும் விவாசாயிகள், இம்முறை சிறுபோகச் செய்கைக்கு நீர் போதாமையாக உள்ளதுடன், இதனால், தங்களின் வேளாண்மை அழியும் நிலை உள்ளது எனவும் தெரிவித்தனர். எனவே, தங்களின் சிறுபோகச் செய்கைக்கு வேண்டிய நீர் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் விவசாய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன.
இதனை அடுத்து, கிராமிய பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயச் செய்கையில் ஈடுபடும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல், பிரதி அமைச்சரின் இல்லத்தில் சனிக்கிழமை (30) மாலை நடைபெற்றது. இதன்போதே, மேற்படி உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாதுறுஓயா நீரைத் திறந்துவிடும் பட்சத்தில் நீரை மறித்து விவசாயிகள் இடையூறு செய்வதில்லை என்பதுடன், சகல வயல்களுக்கும் நீர் கிடைப்பதற்கு விவசாய அமைப்புகள் உதவுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago