Suganthini Ratnam / 2016 மே 02 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்
விசுவாசமற்றவர்கள் கட்சியிலிருந்து விலகி நில்லுங்கள் நின்று நிதானித்து நிறைவு கண்ட பின் எங்களோடு சேருங்கள் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய மே தினக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சாத்வீகம் எமது கொள்கை, சம்பந்தன் ஐயா எங்கள் தலைவர், சமத்துவம் எமது இலக்கு இவற்றை கடைப்பிடிக்க எமக்கு தேவை அர்ப்பணிப்பு, விசுவாசம். விசுவாசமற்றவர்கள் கட்சியிலிருந்து விலகி நில்லுங்கள், நின்று நிதானித்து நிறைவு கண்ட பின் எங்களோடு சேருங்கள்.
நடக்காது என்று நினைத்துக் கொண்டு ஏன் நடக்க வேண்டும். இது நடக்கும் வகையில் நாம்; நடப்போம் என்பது எமது தாரக மந்திரமாக இருக்கட்டும். நாம் கண்ணீரால் மட்டுமல்ல, அதற்கும் மேலாக பெருமை மிக்க தியாகங்களினாலும் தியாகிகளின் விலை மதிப்பற்ற உயிர்களினாலும் காத்திட்ட பயிர் இது. இந்தப் பயிர் வாழ்ந்திட வடிவமைக்கப்பட வேண்டிய செயற்திட்டம்தான் அரசியலமைப்பு திருத்தச்சட்டமாகும். அதனை ஆக்கிடும் காலமிது. அரசியல் நிர்ணய சபையிலே அரசியல் உறுப்புரைகள் ஆராயப்படும்போது எமது கோரிக்கைகளை எப்படி சேர்;ப்பது என்றெல்லாhம் எமது உறுப்பினர்கள் ஆராய்ந்து நுணுக்கமாக செயற்படுவார்கள்.
பிராந்தியத்திற்கான அதிகாரம் பிரிக்கப்படாத நாடு மக்களின் இறைமையை அங்கிகரிக்கும் கோட்பாடு மத்திக்கு என்று வரையறுக்கப்பட்டவை போக ஏனைய விடயங்கள் தொடர்பில் சட்டமாக்கும் அதிகாரம். கொடுக்கப்பட்ட அதிகாரங்களை பறித்தெடுக்காத பொறிமுறை, நிதிக்கையாள்கை, சட்டம் ஒழுங்கு வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு உடன்படிக்கை நிலவுடமை, பிரந்திய நீதி சார் நடவடிக்கை என்பன தொடர்பாக நியாயப்படுத்தி இணக்கப்பாட்டை பெற்று அரசியலமைப்பில் உறுதிப்படுத்தி நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய சர்வேதசத்திற்கு கண்ணுக்கு நீதியானது என்று படக்கூடிய அரசியலமைப்பு ஒன்றை உரவாக்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அர்ப்பணிப்புடன் செயற்படும். இவை சாத்தியமாக்க தொழிலாளர் தோழர்கள் எங்களோடு தோல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு எப்போதும் உண்டு' என்றார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago