Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்,பொன் ஆனந்தம், எம்.முபாரக்,வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 04 வைத்தியசாலைகளுக்கு சி.சி.ரி.வி;. கமெராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில்;, 5.22 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில் செங்கலடி மாவட்ட வைத்தியசாலை, வாழைச்;சேனை ஆதார வைத்தியசாலை, மீராவோடை மாவட்ட வைத்தியசாலை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றிலேயே கமெராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தின்போது, வைத்தியசாலைகளில் இடம்பெற்ற பல சம்பவங்களினால்; எழுந்த பிரச்சினைகளைத் தொடர்ந்து, மக்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய வைத்தியசாலைகளில் கமெராக்களை பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் முறைப்பாடுகளுடன் கூடிய பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்கு கமெராக்கள் உதவியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025