2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'வெள்ளை வான் கடத்தல் வேண்டாம்' எனக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மே 06 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்

'வெள்ளை வான் கடத்தல் வேண்டாம்' என்று வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, காந்தி பூங்காவுக்கு முன்பாக ஆரம்பமாகி மாவட்டச் செயலகம் வரை சென்று  அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.

இதன்போது,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் மகஜர்கள் காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தால் கையளிக்கப்பட்டன.

வெள்ளை வான் கலாசாரத்தை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மீண்டும் அந்தக் கலாசாரம் ஆரம்பமாகியுள்ளமை எம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளதுடன்,  மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளதா என்ற சந்தேககத்தையும் ஏற்படுத்துகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியை தோற்கடிக்கும் நோக்கில் அல்லது அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்காக மக்களை அச்சம் கொள்ளச் செய்யும் இந்த வெள்ளை வான் கலாசாரம், எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது.  இந்தச் சட்டவிரோத கடத்தல் குறித்து விசாரணை செய்து இதற்கு பொறுப்பானவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை தடுக்குமாறும் மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X