2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'வாழ்வாதார உதவியுடன் ஏனைய வசதிகளும் செய்யப்படும்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 13 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வாழ்வாதார உதவிகளோடு ஏனைய வசதிகளையும் இன, மத பேதமின்றி வறிய மக்களுக்குச் செய்து கொடுப்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

அவரது 30 இலட்ச ரூபாய் சமூக சேவைக்கான நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர்ப்;பற்று பிரதேச செயலகப் பிரிவில் மீராகேணி கிராமத்திலுள்ள 150 வறிய குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான நல்லின கோழிக்குஞ்சுகள் இன்று  வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. இங்கு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  'வாழ்வாதாரத்துக்காகப் போராடும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்ற குடும்பங்களுக்குக் கை கொடுத்து எழுப்பி விடுவதற்காக இந்த உதவிகள் செய்யப்படுகின்றன. இதனை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.

பாதிக்கப்பட்ட கிராமங்களில் அநேக வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியிருக்கின்றது. எனது நாடாளுமன்ற நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் 200 இலட்சம் ரூபாய் நிதியை கிராம மக்களி;ன் அபிவிருத்திக்காக பயன்படுத்தவுள்ளேன்.
யுத்த காலத்தில் கிராம மக்கள் பயந்து பயந்து வாழ்ந்த வாழ்க்கை இப்போது இல்லை. இந்த நாட்டின் எந்த மூலை முடுக்கிலும் எல்லோரும் வாழ வேண்டும் என்கின்ற உரிமையை நிலை நாட்டுவதற்காகவே இந்த நல்லாட்சியை ஏற்படுத்தியிருக்கின்றோம். இது நல்லாட்சியின் ஆரம்பம் மாத்திரமே, இந்த நல்லாட்சியின் முழு ஆட்சிக் காலத்திலும் இன்னும் எத்தனையோ நல்ல மாற்றங்கள் நிகழவிருக்கின்றன' என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட், மிருக வைத்தியர் வி.பி.எம்.கே. அபேவர்தன, சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி. நிபாத், ஏறாவூர் நகர சபை முன்னாள் பிதா எம்.ஐ. தஸ்லீம் உட்பட அதிகாரிகளும், பொது மக்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X