2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

251 ஹெக்டேயரில் சோளம் செய்கை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 01 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் 16 விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் இம்முறை சுமார் 251 ஹெக்டேயரில் சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இராசரெத்தினம் கோகுலதாசன் தெரிவித்தார்.
 
மாற்றுப் பயிர்ச் செய்கைத் திட்டத்தின் கீழ் கரடியனாறு, வாகரை, வாழைச்சேனை, வந்தாறுமூலை, கிரான், ஏறாவூர், ஆயித்தியமலை, மண்டபத்தடி, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, பழுகாமம்,  மண்டூர், வெல்லாவெளி, தாந்தாமலை, கொக்கட்டிச்சோலை ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவுகளிலேயே சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளன.

மேலும், சோளம் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய அடிப்படையில் சோளம் விதைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X