2025 மே 01, வியாழக்கிழமை

வெருகல் பிரதேச சபை வரவு - செலவுத் திட்டம் 2ஆவது முறையாகவும் தோல்வி

Menaka Mookandi   / 2014 ஜனவரி 07 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிருவாகத்திலுள்ள வெருகல் பிரதேச சபையின் திருத்தியமைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம், இரண்டாவது தடவையாகவும் நேற்று திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டது.

குறித்த பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம், கடந்த டிசெம்பர் 24ஆம் திகதி முதல் தடவை சமர்ப்பிக்கப்பட்ட போது அது உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை பிரதேச சபைத் தலைவர் எஸ்.விஜயகாந்த், இரண்டாவது தடவையாக திருத்தியமைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தார். இந்த வரவு - செலவுத் திட்டத்திற்கு மூன்று பேர் ஆதரவாகவும் நான்கு பேர் எதிராகவும் வாக்களித்ததை அடுத்து அது தோற்கடிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர் விஜயகாந்த், உறுப்பினரான ஜெயகாந்தன், மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி) கட்சி உறுப்பினரான ஜே.சந்திரமதி ஆகியோர் திருத்தியமைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உப தவிசாளர் கே.மாணிக்கவாசன், எஸ்.ஞானதாஸன், ஆர்.தங்கத்துரை, பொதுஜன மக்கள் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த கே.கோமளகாந்தி ஆகியோர்  எதிர்த்து வாக்களித்தனர்.

பிரதேச சபைத் தலைவர் தமது ஏனைய உறுப்பினர்களைக் கலந்தாலோசிக்காது தன்னிச்சையாகவே வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து சமர்ப்பித்தார் என்பதாலேயே தாம் அதனை எதிர்த்து தோல்வியடையச் செய்ததாக வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .