2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

'நாம் வெற்றியடைவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன'

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாங்கேணி மக்கள் தெளிவாக இருக்கின்றனர். நாம் வெற்றியடைவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மாங்கேணி பிரப்படிமடுப் பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பிரசாரக்  கூட்டத்திலே கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு  தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வடக்குத் தலைமைகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். எம்மை மாற்றாந் தாய்ப் பிள்ளையாகவே அவர்கள் கருதுகின்றனர். அதனால்தான் வெருகலாற்றில் எம்மீது படையெடுத்து எம் போராளிகளைக் கொலை செய்தனர்.

நிச்சயமாக இத் தேர்தலில் தோற்கப் போகும் கூட்டமைப்பினர் ஒரேயொரு அறிக்கையினை மாத்திரம் பத்திரிகை வாயிலாக விட்டு எம் மக்களைக் கைவிட்டு ஓடி விடுவர். இதைத்தான் அவர்கள் 62 வருட காலமாகச் செய்து வருகின்றனர். நாம் அழிந்த போதெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தாம் மட்டும் சுகபோகிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் எமக்குத் தேவையா? நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

வாகரைப் பிரதேச சபைத் தவிசாளர் சூட்டியினால்  ஏற்பாடு செய்யப்பட்ட இக் கலந்துரையாடலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆஸாத் மௌலானா, மண்முனை மேற்குப் பிரதேச சபை தவிசாளர் பிறைசூடி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .