2025 மே 02, வெள்ளிக்கிழமை

'அகவிழி' சஞ்சிகையின் 100 ஆவது இதழ் வெளியீடு

Kogilavani   / 2014 ஜனவரி 27 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


'21ஆம் நூற்றாண்டின் அறிவு சார் சமூகமும், இலங்கையில் தமிழ் கல்வியும்' எனும் தலைப்பில் 'அகவிழி' சஞ்சிகையின் 100 ஆவது இதழ் வெளியீடும் கல்விக் கருத்தரங்கும் ஞாயிற்றுக்கிழமை (27) மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசியப் பாடசாலையில் நடைபெற்றது.

பேராசிரியர் மா.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேராசிரியர் சி.மௌனகுரு, கலாநிதி தெ.திருச்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, 'அகவிழி' சஞ்சிகையின் 100ஆவது இதழை அதன் ஆசிரியர் ச.இந்திரகுமார் வெளியிட்டு வைத்தார்.

கருத்தரங்கில், பேராசிரியர் மா.செல்வராசா 'கிழக்கு மாகாண தமிழ் கல்வி – சமகால நிலைமைகள் எதிர்காலச் சவால்கள்' எனும் தலைப்பிலும்
பேராசிரியர் சி.மௌனகுரு 'கல்வியில் அறிவுசார் சமூகம் - சமகால நிலைமைகளும் கற்பித்தல் அனுபவங்களும்' எனும் தலைப்பிலும்  கலாநிதி தெ.திருச்செல்வம் 'கல்வி சார் ஆளணியினரின் வாண்மைத்துவ மேம்பாடு –ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் சமூக முன்னேற்றமும்' எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .