2025 மே 01, வியாழக்கிழமை

முன்னாள் எம்.பியான ஜோசப் பரராஜசிங்கத்தின் 08 ஆவது ஆண்டு நினைவுத்தினம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 25 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்,சி.பாக்கியநாதன்

படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் எட்டாவது ஆண்டு நினைவுத்தினம் இன்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சேயோன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களின் மாகாணசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை தலைவர்கள்,உறுப்பினர்கள்,இளைஞர் அணி உறுப்பினர்கள்,கட்சி உறுப்பினர்கள்,பொதுமக்கள்,வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரின்ஸ் காசிநாதர்,த.கனகசபை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் சிவயோகச்செல்வன் சிவஸ்ரீ சாம்பசிவ குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுதப்பட்டதுடன் நினைவுப்பேருரையும் இடம்பெற்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .