2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் நீர் வற்றியுள்ள 100 குளங்கள்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 100 குளங்களில் நீர் வற்றியுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் என்.சிவலிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 456 நீர்ப்பாசனக்குளங்கள் உள்ளன. இதில் 112 குளங்கள் மாத்திரம்  பயன்படுத்தப்படுகின்றன.  இதில், 11 நீர்ப்பாசனக்குளங்களில்  புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இக்குளங்கள் வரட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் வேலைக்கான காசு எனும் வகையில் புனரமைக்கப்படுகின்றன.

இந்நிலையில்,  100 குளங்கள் வரட்சியால் நீர் வற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இக்குளங்களை நம்பிய  விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடைகளும் நீரின்றி அவதியுறுவதை காணமுடிவதாகவும் அவர் கூறினார்.

ஏனைய குளங்கள் யுத்தத்தினால் மற்றும் பராமரிப்பின்மையினால் செயலிழந்து போயுள்ளதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0

  • வை.எல்.மன்சூா் Saturday, 30 August 2014 11:44 AM

    அரசாங்கத்திற்கு ஆதரவாக அனைவரும் மாறுவதுதான் ஒரே வழி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X